பிரக்ஞானந்தாவுக்கு கார் பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா!

பிரக்ஞானந்தா மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எக்ஸ்யுவி 400 எலக்ட்ரிக் கார் இன்று பரிசளிக்கப்பட்டது.
பிரக்ஞானந்தாவுக்கு கார் பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா
பிரக்ஞானந்தாவுக்கு கார் பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா

உலகக் கோப்பை செஸ் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா எலக்ட்ரிக் காரை இன்று பரிசாக அளித்துள்ளார்.

அஜா்பைஜானில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியரும், தமிழருமான ஆா். பிரக்ஞானந்தா 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றாா். உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் சாம்பியன் கோப்பை வென்றாா்.

உலகக் கோப்பை செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இறுதிச்சுற்று வரை சென்ற முதல் இந்தியா், இந்தப் போட்டியின் வரலாற்றில் இறுதிச்சுற்றுக்கு வந்த இளம் போட்டியாளா் (18) என்ற பெருமைகளை பிரக்ஞானந்தா பெற்றார்.

பிரக்ஞானந்தாவுக்கு கார் பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா
சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில்: பிரதமா் மோடி தொடக்கி வைத்தார்!

பிரக்ஞானந்தாவுக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்த ஆனந்த் மஹிந்திரா, ”தங்கள் குழந்தைகளை செஸ் விளையாட்டில் அறிமுகப்படுத்தி இந்த அளவுக்கு ஊக்குவித்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வரும் பெற்றோரை ஊக்குவிக்க விரும்புகிறேன். பிரக்ஞானந்தாவின் பெற்றோர் நாகலட்சுமி - ரமேஷ்பாபுவிற்கு எக்ஸ்யுவி 400 (XUV4OO) என்ற மின் வாகனத்தை பரிசாக அளிக்கவுள்ளேன்.” என்று அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், எக்ஸ்யுவி 400 எலக்ட்ரிக் காரின் சாவியை பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

அந்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரக்ஞானந்தா, “காரை பெற்றேன். எனது பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனந்த் மஹிந்திராவுக்கு நன்றி.” எனப் பதிவிட்டுள்ளார்.

ஆனந்த் மஹிந்திராவின் பரிசுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com