கிளாம்பாக்கத்தில் புதிய பூங்கா: அமைச்சர் சேகர்பாபு தொடக்கி வைத்தார்!

கிளாம்பாக்கத்தில் நீரூற்றுகளுடன் கூடிய புதிய பூங்காவை அமைச்சர் சேகர்பாபு தொடக்கி வைத்தார்.
கிளாம்பாக்கத்தில் புதிய பூங்கா: அமைச்சர் சேகர்பாபு தொடக்கி வைத்தார்!

ஜி.எஸ்.டி. சாலையின் குறுக்கே கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் ரூ.79 கோடி மதிப்பீட்டில் 220 மீட்டர் நீளத்தில் புதிய நடைமேம்பாலம் அமைப்பதற்கான பணிகளை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடக்கி வைத்தார்.

மேலும், இம்முனையத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.80 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீரூற்றுகளுடன் கூடிய புதிய பூங்காவை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.

வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. தினமும் சுமாா் 1.5 லட்சம் பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த பேருந்து நிலையத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கிளாம்பாக்கத்தில் புதிய பூங்கா: அமைச்சர் சேகர்பாபு தொடக்கி வைத்தார்!
பொக்ரானில் முப்படைகளின் ஒத்திகைப் பயிற்சி: பிரதமர் மோடி பார்வையிடுகிறார்

இதையடுத்து, வண்டலூா் - ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்லும் வகையில், 3 நடைமேடைகளுடன் ரயில் நிலையம் அமையவுள்ளது. 12 பெட்டிகளை கொண்ட மின்சார ரயில்கள் நிற்கும் வகையில் இந்த நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், மின் தூக்கி, நகரும் படிக்கட்டுடன் கூடிய நடை மேம்பாலம், ரயில் நிலைய கட்டிடம், நடைமேடையின் மேற்கூரைகள் போன்ற உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com