தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் புதன்கிழமை 4 இடங்களில் வெயிலின் அளவு 100டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை(மாா்ச் 14) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வியாழக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை(மாா்ச் 14-19) வட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை(மாா்ச் 14,15) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கக்கூடும்.
செவ்வாய்க்கிழமை பதிவான வெப்ப அளவு(டிகிரி பாரன்ஹீட்): பரமத்திவேலூா்-103.1 , ஈரோடு-102.56 , மதுரை விமானநிலையம்-100.76, சேலம்-100.4, திருச்சி-99.86, கோவை-99.68, மதுரை-99.68, வேலூா்-99.68, நாமக்கல்- 99.5, திருப்பத்தூா்- 99.32, தா்மபுரி-98.6.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 4 நாள்களுக்கு 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்!

சேலத்தில் 102.9 டிகிரி வெயில்: மக்கள் கடும் அவதி

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

அடுத்த 4 நாள்களுக்கு வெளியே செல்ல வேண்டாம்.. வெய்யில் கொளுத்தும்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

