
தனியார் கூரியர் நிறுவனத்திற்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வியாழக்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணி எம்.பி. நவாஸ் கனியின் சகோதரருக்கு சொந்தமான கூரியர் நிறுவனங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரத்தில் உள்ள தலைமை அலுவலகம், ராமநாதபுரம் அலுவலகம் என தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வியாழக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகிறது.
கூரியர் நிறுவனத்தை நவாஸ் கனியின் மூத்த சகோதரர் அன்சாரி தலைமை இயக்குநராக இருந்து நடத்தி வருகிறார். நவாஸ் கனி நிர்வாக இயக்குநராக உள்ளார். மற்றொரு சகோதர் சிராஜூதீன் இணை இயக்குநராக இருந்து வருகிறார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் தற்போது சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்து வரும் நவாஸ் கனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமானது கூரியர் நிறுவனம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.