4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை - அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மார்ச் 28 முதல் ஏப்ரல் 29 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஆகஸ்ட் 4-ஆம் நாள் போட்டித் தேர்வுகள் நடைபெறவுள்ளன. 4,000 பேருக்கு அரசு வேலை வழங்குவதற்கான ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை ஆசிரியர் பணிக்காக காத்திருப்போரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மொத்தமுள்ள 10,079 ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை கடந்த 11 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்து வந்த நிலையில், 2,331 நிரந்தர உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 2019 இல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

ஆனால் நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேர்வுப் பணியை முடிக்க இயலவில்லை.

இதையடுத்து முதல்வர் தலைமையில் உயர்நிலைக் குழுக் கூட்டப்பட்டு, தகுதி, கற்பித்தல் அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வுக்குச் சிறப்பு மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறையைக் கைவிட்டு, அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாகப் பணிபுரியப் போட்டி எழுத்துத் தேர்வுக்கு 200 மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வுக்கு 300 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் தேர்வு முறை முடிவு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த முறையினால் சுதந்திரமான நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்வு உறுதி செய்யும். ஆனால் 2019 ஆண்டு முதல் உதவி பேராசிரியர் பணியிடங்கள் தேர்வுச் செய்யப்படவில்லை. அதன் பிறகு அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவர்களின் விண்ணப்பம் இந்த தேர்வுக்கும் பரிசீலிக்கப்படும். புதியதாக 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு, எழுத்துத் தேர்வு பாடங்களுக்கான பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது என உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது அப்போதைய உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், 4,000 பேருக்கு அரசு வேலை வழங்குவதற்கான ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை ஆசிரியர் பணிக்காக காத்திருப்போரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அறிவிப்பு எண். 02/2024

பணி: உதவிப் பேராசிரியர்(ASSISTANT PROFESSORS)

காலியிடங்கள்: 3,921 நடப்பு காலிப் பணியிடங்கள், 79 பின்னடைவு காலிப் பணியிடங்கள் என மொத்தம் 4,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

சம்பளம்: மாதம் ரூ.57,700 - 1,82,400

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு
இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள்: விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் நீட்டிப்பு

பாடப்பிரிவுகள் வாரியான காலியிடங்கள்:

1. உயிர்வேதியியல் - 24

2. உயிரியல் அறிவியல் கல்வி - 1

3. தாவரவியல் - 115

4. தாவர உயிரியல் மற்றும் தாவர உயிரி தொழில்நுட்பம் - 28

5. பயோ டெக்னாலஜி - 5

6. வணிக நிர்வாகம் -20

7. கணினி அறிவியல் - 244

8. கணினி விண்ணப்பம் - 76

9. வேதியியல் - 263

10. வணிகம் - 296

11. வர்த்தகம் (கணக்குகள் & நிதி) - 2

12. வர்த்தகம் (வங்கி மற்றும் காப்பீடு) - 1

13. வர்த்தகம் (கணினி விண்ணப்பம்) - 14

14. வணிகம் (இ-காமர்ஸ்) - 1

15. வர்த்தகம் (சர்வதேச வணிகம்)- 21

16. வணிகம் (கூட்டுறவு) - 14

17. வர்த்தகம் (பெருநிறுவன செயலாளர் பதவி) - 30

18. உடை வடிவமைப்பு மற்றும் பேஷன் - 5

19. பாதுகாப்பு ஆய்வுகள் - 8

20. ஆங்கிலம் - 656

21. பொருளாதாரம் - 161

22. கல்வியியல் - 45

23. எலக்ட்ரானிக்ஸ் - 21

24. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்புபியல் - 9

25. சுற்றுச்சூழல் அறிவியல் - 1

26. ஃபேஷன் டெக்னாலஜி - 1

27. உணவு சேவை மேலாண்மை மற்றும் உணவுமுறை - 7

28. உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து - 4

29. உணவு மற்றும் ஊட்டச்சத்து - 10

30. நிலவியல் - 78

31. புவியியல் - 32

32. வரலாறு - 126

33. வரலாற்று ஆய்வுகள் - 4

34. வரலாற்று கல்வி - 1

35. ஹோம் சயின்ஸ் - 36

36. மனிதவள மேலாண்மை - 36

37. மனித உரிமைகள் - 3

38. ஹிந்தி - 5

39. தகவல் தொழில்நுட்பம் - 12

40. இந்திய கலாசாரம் மற்றும் சுற்றுலா - 4

41. இந்திய இசை - 3

42. இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் - 7

43. கணிதம் - 318

44. நுண்ணுயிரியல் - 32

45. கடல்சார் உயிரியல் - 2

46. கணிதம் கல்வியியல் - 4

47. மலையாளம் - 1

48. ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை - 26

49. அரசியல் அறிவியல் - 37

50. இயற்பியல் - 226

51. உடற்கல்வி - 1

52. உடற்கல்வி அறிவியல் கல்வி - 4

53. பொது நிர்வாகம் - 9

54. உளவியல் - 14

55. புள்ளியியல் - 80

56. சமூகவியல் - 3

57. சமூகப் பணி - 16

58. சமஸ்கிருதம் - 4

59. சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை - 12

60. தமிழ் - 569

61. தெலுங்கு - 2

62. உருது - 3

63. விஷுவல் கம்யூனிகேஷன் - 29

64. வனவிலங்கு உயிரியல் - 5

65. விலங்கியல் - 132

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு
ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 57 வயதிற்குள் இருப்பவர்கள் உதவிப் பேராசிரியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தகுதி: குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் அல்லது இந்தியப் பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட, தொடர்புடைய பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறையின் படியும், உயா்கல்வித் துறையின் அரசாணையின் அடிப்படையிலும், ‘நெட்’ அல்லது ‘செட்’ தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தமிழ் மொழியை பாடமாக எடுத்து படிக்காமல், பிற மொழி எடுத்து படித்தவா்கள் தமிழ் மொழி தோ்வில் பணி நியமனம் செய்யப்பட்ட 2 ஆண்டுக்குள் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும்.

உயா்கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்தது போன்று, கௌரவ விரிவுரையாளா்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட உள்ளதால், அவா்கள் பணி அனுபவச் சான்றுகளை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.trb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் அதனை சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து விவரங்களும் மேற்கண்ட இணையதளத்தில் வெளியிடப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

உயா்கல்வித் துறை, அரசாணை அடிப்படையில் எழுத்துத் தோ்வு 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்; முதுநிலைப் பாடங்களில் இருந்து போட்டித் தோ்வு கேள்விகள் இடம்பெறும். முதல் தாளில் 3 மணி நேரத்துக்கு 100 மதிப்பெண்களுக்கு தோ்வு நடத்தப்படுகிறது. அதில், பகுதி-1-இல் தமிழ் பாடத்தில் 25 மதிப்பெண்கள், பொது அறிவு 25 மதிப்பெண்கள் என மொத்தம் 50 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம் பெறும். பகுதி 2-இல் 2 மணி நேரத்துக்கு 50 மதிப்பெண்களுக்கு தோ்வு நடைபெறும். 2-ஆம் தாளில் 100 மதிப்பெண்களுக்கு தோ்வு நடைபெறும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 4.8.2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.4.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com