
நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் நிறுவனருமான மன்சூர் அலிகான் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
”நான் என் சொந்த உழைப்பின் மூலமாக தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். என்னிடம் கடன் வாங்கியவர்கள் தயவுசெய்து எங்கிருந்தாலும் என்னிடம் கொடுத்துவிடுங்கள்..
அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் என்னோடு கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அதிமுக என்ற பெரிய இயக்கத்தின் மூலமாக எனக்கொரு மக்களவை உறுப்பினர் பதவி கிடைத்து விடும் என்று சில ஊடகங்களுக்கு பொறாமை உள்ளது
வேலூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேலைகளை இன்றே தொடங்க இருக்கிறேன்.
பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்குவது பிச்சை இடுவதற்கு சமம் என்ற குஷ்பூ கூறியிருப்பது தவறானது, கண்டிக்கத்தக்கது. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே. முடிந்தால் குஷ்பூ பத்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டியது தானே, அதை விட்டுவிட்டு இப்படி பேசுவது தவறானது.
மீண்டும் மோடி ஆட்சியமைக்க தமிழகத்தில் காலூன்ற நான் விடமாட்டேன்;அதற்கான ஆயுதத்தை கையில் எடுப்பேன்.
கிளியை வளர்த்து வேறு கையில் கொடுத்து விட்டீர்களே நாட்டாமை” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.