திமுக வேட்பாளர் பட்டியல்: வாய்ப்பு மறுக்கப்பட்ட எம்பிக்கள்

திமுக வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட எம்பிக்களின் விவரம்
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

அதில், 11 புதிய முகங்களுக்கும், 3 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது எம்.பி.க்களாக இருக்கும் சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அதாவது, வடசென்னை தொகுதியில் கலாநிதி வீராசாமி, தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர். பாலு, அரக்கோணம் தொகுதியில் ஜெகத் ரட்சகன், வேலூரில் கதிர் ஆனந்த், திருவண்ணாமலை தொகுதியில் அண்ணாதுரை, சேலம் தொகுதியில் செல்வகணபதி, ஈரோடு தொகுதியில் பிரகாஷ் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனியில் தங்க தமிழ்ச்செல்வன், தூத்துக்குடியில் கனிமொழி, ஆரணியில் தரணிவேந்தன், நீலகிரியில் ஆ. ராசா, பெரம்பலூரில் அருண் நேரு, கோவையில் கணபதி ராஜ்குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

திமுக வேட்பாளர் பட்டியலில் போட்டியிடும் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு மேல் புதியவர்கள். மூன்று பேர் பெண்கள், அடிமட்ட தொண்டர்கள், ஒன்றியச் செயலாளர்கள் இரண்டு பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முனைவர் பட்டம் பெற்ற இருவர், இரண்டு மருத்துவர்கள், 19 பேர் பட்டதாரிகள், 6 பேர் வழக்குரைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் எம்.பி.க்கள் சிலருக்கு, திமுகவில் இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர்களில் பொன்முடி மகன் கௌதம சிகாமணிக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யாக உள்ளார்.

தஞ்சையில் ஆறு முறை எம்.பி.யாக இருந்த எஸ்.எஸ். பழனி மாணிக்கத்துக்கும், தருமபுரி தொகுதி எம்.பி. செந்தில் குமார், சேலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பார்த்திபன் ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com