விளவங்கோடு தொகுதியில் போட்டியிடப்போவது யார்? முற்றும் மோதல்

விளவங்கோடு தொகுதிக்கு காங்கிரஸ் - சிபிஎம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
விளவங்கோடு தொகுதியில் போட்டியிடப்போவது யார்? முற்றும் மோதல்

கன்னியாகுமரி: மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாதமே உள்ள நிலையில், அதே நாளில், தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இடைத்தேர்தலுக்கு தயாராகிவரும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட திமுகவின் கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போர் மூண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த இடத்தைப் பிடிக்க முயற்சித்து வரும் நிலையில், காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்துவதில் உறுதியாக உள்ளது. இங்கு நான்காவது முறையாக காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொள்ள மும்முரம் காட்டி வருகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கு ஏப்.19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, பாஜகவில் சோ்ந்ததால் அவா் தனது சட்டப்பேரவை உறுபிப்பினா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

இதனால் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.19ல் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.

விளவங்கோடு தொகுதியில் போட்டியிடப்போவது யார்? முற்றும் மோதல்
பிள்ளைகள் நன்றாகத் தூங்கவில்லையா? நரம்பியல் பிரச்னைகள் ஏற்படும் ஆபத்து!

மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளன்றே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கும் ஏப்.19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த விளவங்கோடு தொகுதியைக் கைப்பற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ஆர். செல்லசுவாமி பேசுகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கட்சி சார்பில், விளவங்கோடு தொகுதியை கேட்டுள்ளோம் என்றார்.

முன்பு விளவங்கோடு தொகுதியில் கூட்டணி வைத்தாலும், தனித்து போட்டியிட்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்துள்ளது. அப்போது, விளவங்கோடு தொகுதி, கட்சியின் பலம்வாய்ந்த தொகுதியாக இருந்தது. அதனால், தற்போது கட்சித் தொண்டர்களும் தலைவர்களும் விளவங்கோடு தொகுதியை கேட்டுள்ளனர். கன்னியாகுமரி தொகுதிகாங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அப்போதுதான், மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள் கன்னியாகுமரியில் மக்களவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு முழு ஆதரவு கொடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடைசியாக 2006-ம் ஆண்டு விளவங்கோடு தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது. 2011, 2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் விஜயதரணி வெற்றி பெற்ற பிறகு தொடர்ந்து 15 ஆண்டுகாலம் எம்எல்ஏவாக இருந்த பதவி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில்தான், விளவங்கோடு தொகுதியை பெறுவதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உறுதியாக இருக்கிறார்கரள். இது குறித்து ஸ்டாலினுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால், தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற தொகுதியை காங்கிரஸ் விட்டுக்கொடுக்காது என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே. செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். வரும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியே வேட்பாளரை நிறுத்தும். 12 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இன்னும் ஒரு சில நாள்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com