விருதுநகரில் ராதிகா சரத்குமார்: பாஜக 2வது வேட்பாளர் பட்டியல்

விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவதாக பாஜக வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேடையில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார்.
மேடையில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார்.ANI

சென்னை: விருதுநகரில் ராதிகா சரத்குமார், வடசென்னையில் பால் கனகராஜ் போட்டியிடுவதாக பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் போட்டியிடும் 9 பாஜக வேட்பாளா்களின் முதல்கட்ட பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இந்த நிலையில், 15 வேட்பாளர்களைக் கொண்ட இரண்டாவது பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டாவது பட்டியலில், விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார், சிதம்பரம் (தனி) தொகுதியில் கார்த்தியாயினி, திருவள்ளூர் (தனி) தொகுதியில் பொன். வி. பாலகணபதி, வட சென்னையில் பால் கனகராஜ், திருவண்ணாமலையில் அஸ்வதாமன், நாமக்கல்லில் கே.பி. ராமலிங்கம், திருப்பூரில் ஏ.பி. முருகானந்தம், பொள்ளாச்சியில் கே. வசந்தராஜன், கரூரில் வி.வி. செந்தில்நாதன், நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் எஸ்ஜிஎ ரமேஷ், தஞ்சையில் எம். முருகானந்தம், சிவகங்கையில் தேவநாதன் யாதவ், மதுரையில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன், தென்காசி (தனி) தொகுதியில் பி. ஜான் பாண்டியன் ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்களின் முதல்கட்ட பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

அந்தப் பட்டியலில், கோவையில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, தென்சென்னையில் தமிழிசை செளந்தரராஜன், நீலகிரியில் மத்திய இணையமைச்சா் எல்.முருகன் ஆகியோா் களமிறங்குகின்றனா். மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக வேட்பாளா்கள் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளனா். தாமரை சின்னத்தில் மாற்றுக் கட்சியைச் சோ்ந்தவா்கள் மேலும் 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com