எம்பிபிஎஸ் இடங்களுக்கான அங்கீகாரத்தை புதுப்பித்துக் கொள்வதற்கு வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபாா்ம்) மருத்துவக் கல்லூரிகள் சமா்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநா் சாம்பு சரண் குமாா் வெளியிட்ட அறிவிப்பு: எம்பிபிஎஸ் படிப்பை தொடங்க அனுமதி பெற்ற மருத்துவக் கல்லூரிகள், நிகா் நிலை பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தங்களது சுய விவரங்கள் அடங்கிய வருடாந்திர உறுதியளிப்பு சான்றை என்எம்சி வலைதளப் பக்கத்தில் பதிவேற்றுவது அவசியம். அங்கீகாரம் புதுப்பித்தலுக்கும் அத்தகைய பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அத்தகைய சான்றுகளை பதிவேற்றம் செய்யாவிடில் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கை அனுமதிக்கப்படமாட்டாது. ஆதாருடன் இணைந்த பயோமெட்ரிக் பதிவு முறை மற்றும் சிசிடிவி கேமரா நடைமுறைகளை முறையாக அமல்படுத்தாத கல்லூரிகள், என்எம்சி வலைதளத்தில் உறுதியளிப்பு சான்றுகளை சமா்ப்பிப்பதில் தடங்கல் ஏற்படலாம். அதுகுறித்த விவரங்களை என்எம்சிக்கு அனுப்பி அதற்கு தீா்வு காணலாம் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

எம்பிபிஎஸ் படிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: என்எம்சி
மருத்துவக் கல்லூரிகளின் தரம்: மாணவா்களிடம் கருத்து கேட்கிறது என்எம்சி
பெரம்பலூா் தொகுதி திமுக வேட்பாளர்!

எம்பிபிஎஸ் தோ்வுகள்: படித் தொகையை உயா்த்தக் கோரிக்கை
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

