ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 மார்ச் 2024, 9:05 am

தமிழகத்தில் புகழ்பெற்ற பழனி மலைக்கோயிலுக்குச் செல்லும் முக்கிய ரயில் நிலையமான திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பழநி ரயில் நிலையத்தில் காவல்துறையினர், வெடிகுணடு நிபுணர்களின் உதவியோடு வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறதா என சோதனையில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு இன்று 50 காவல்துறையினர், விரைந்து வந்து ரயில் நிலையம் முழுவதும் மோப்பாய் நாய் உதவியோடு சோதனையில் ஈடுபட்டனர்.

தொடரந்து பேசிய திண்டுக்கல் கண்காணிப்பாளர் பிரதீப் கூறுகையில், பழனி ரயில் நிலையத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. எனவே, விரைந்து வந்து ரயில் நிலையத்தை ஆய்வு செய்தோம். இங்கு வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லை. மிரட்டல் விடுத்தவர் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.