இசையிலும் அரசியலைக் கலக்க வேண்டாம்: ஸ்டாலின் வேண்டுகோள்

இசையிலும் அரசியலைக் கலக்க வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின்.
முதல்வர் மு.க. ஸ்டாலின்.
Published on
Updated on
1 min read

சென்னை: அரசியலில் மத நம்பிக்கையைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலை கலக்க வேண்டாம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.

இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு, சென்னை மியூசிக் அகாதெமியின், சங்கீத கலாநிதி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இசைப் பாடகிகள் ரஞ்சனா-காயத்ரி சகோதரிகள் உள்ளிட்ட சில இசைக் கலைஞர்கள் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தனது வலைத்தளப் பக்கத்தில் ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது, சிறந்த பாடகர் டிஎம்.கிருண்ணா அவர்கள் மியூசிக் அகாதெமியின் 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இசைத் திறனுக்குத்தான் விருது: டி.எம். கிருஷ்ணா விவகாரத்தில் மியூசிக் அகாதெமி விளக்கம்

கிருஷ்ணா அவர்கள் கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்.
டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி: இசைக் கலைஞர்கள் எதிர்ப்பு

கிருஷ்ணா அவர்கள் இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.

டி.எம். கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை! என்று வலியுறுத்தியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com