பொறையாரில் குருத்தோலை பவனி

பொறையாரில் குருத்தோலை ஞாயிறு பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொறையாரில் குருத்தோலை பவனி

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் குருத்தோலை ஞாயிறு பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

பொறையாரில் உள்ள 278 ஆண்டுகள் பழமையான தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பெத்லேகம் ஆலய சபை குரு ஜான்சன் மான்சிங் தலைமையில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனி ஊர்வலம் பொறையார் பழைய பேருந்து நிலையம் முன்பு தொடங்கி தரங்கம்பாடி பேரூராட்சி முக்கிய வீதிகள் வழியாக ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா பாடல் பாடி ஊர்வலமாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தனர்.

பொறையாரில் குருத்தோலை பவனி
ஆலங்குளத்தில் குருத்தோலை பவனி!

அதனைத் தொடர்ந்து தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் டி.பி.எம்.ஏ கல்லூரி முதல்வர் ஜான்சன் ஜெயக்குமார், சபைகுரு , பேராசிரியர் ஜோயல் எட்வின் ராஜ், சீகன்பால்க் அருங்காட்சியகம் இயக்குநர் சாமுவேல் மனுவேல், சபை பொருளாளர் பாஸ்கர், சம்பத், பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஜோன்ஸ் எப் செல்லப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com