புனித வெள்ளி: சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகள்!

சென்னையிலிருந்து வியாழக்கிழமை இரவு முதலும், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.
புனித வெள்ளி: சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகள்!
DOTCOM

புனித வெள்ளி, வார இறுதி நாளை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

வருகின்ற 29-ஆம் தேதி புனித வெள்ளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தொடர்ந்து, வார விடுமுறை வருவதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வதற்கு வசதியாக சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

புனித வெள்ளி: சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகள்!
பம்பரம் சின்னம்: நாளைக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு கெடு!

இதுகுறித்து தமிழக போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்தி:

“சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 28/03/2024 (வியாழக் கிழமை) அன்று 505 பேருந்துகளும், 29/03/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 300 பேருந்துகளும், 30/03/2024 (சனிக்கிழமை) 345 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 28/03/2024, 29/03/2024 மற்றும் 30/03/2024 (வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை) அன்று 120 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com