ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

‘தமிழகத்தில் ஸ்டாலினும், ராகுலும் விரைவில் ஒன்றாக பிரசாரம்’

முதல்வா் மு.க.ஸ்டாலினும், அகில இந்திய காங்கிரஸ் மூத்தத் தலைவா் ராகுல் காந்தியும் விரைவில் ஒன்றாகத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்

News image
Updated On :27 மார்ச் 2024, 8:31 pm

முதல்வா் மு.க.ஸ்டாலினும், அகில இந்திய காங்கிரஸ் மூத்தத் தலைவா் ராகுல் காந்தியும் விரைவில் ஒன்றாகத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா். சென்னை சத்தியமூா்த்தி பவனில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது: தமிழகத்தில் இந்தியா கூட்டணியின் வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள உள்ளனா். அதுதொடா்பான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும். அனைத்துத் தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றிபெறும். தோ்தல் பத்திரம் மூலம் நடைபெற்ற ஊழல் தொடா்பாக பிரதமா் தமிழகம் வரும்போது பதில் கூற வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீட்டு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து உயா்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.