காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்த பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக துணைப் பொதுச்செயலர் கனிமொழி கோவை அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி விடுதியில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக கூட்டனி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கோவையில் நிச்சயமாக வெற்றி பெறுவார் என்பது பிரசாரத்தில் தெரிகிறது எனவும் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி இருக்கும் என்பதும் தெளிவாகியுள்ளது என்றும் குறிப்பிட்டார். கடந்த மூன்றாண்டுகளில் திமுக அரசு மக்களுக்கு செய்திருக்கின்ற திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றிருக்கிறது என்பதால் திமுக கூட்டனியில் இருக்கும் இந்தியா கூட்டனி மத்தியில் உருவாக வேண்டும் என்றும் பாஜக மீண்டும் எந்த பொறுப்புக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்றும் கூறினார்.

மகளிர் உதவி தொகையை ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த திட்டம் மக்களை சென்று சேர்ந்திருக்கிறது என்று சுட்டி காட்டினார். இதேபோல் காலை உணவு திட்டம் மக்களிடையே பெரிய அளவில் சென்று இருக்கிறது என்றும் கூறினார். மேலும் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக கூறிய அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, போதைப்பொருள் தடுப்பு துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அதற்கு மத்திய உள்துறை அமைச்சரகம் தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு உதவுவதற்கு மாநில அரசு தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

குஜராத்தில் தான் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அந்த துறைமுகம் யாருடையது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் குறிப்பிட்டார். இதைப்போல் கோவையில் பாஜக 60 சதவிகித வாக்குகள் பெற்று மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்ற அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் 60 வாங்கலாம் 90% கூட வாங்கலாம் எனவும் கனவு காண்பது அவரது உரிமை. ஒரு பைசா கூட ஓட்டுக்கு செலவழிக்க மாட்டேன் என்று அண்ணாமலை கூறுகிறார், பின்னர் எதற்காக அவ்வளவு கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கினார்கள் என்றும் அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். நாங்கள் யாருக்கும் காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. முதல்வர் திட்டங்களை நம்பித்தான் இங்கே வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com