புதுச்சேரியில் துணைமின் நிலைய சுவர் இடிந்து விபத்து: பலி 5ஆக உயர்வு

புதுச்சேரியில் துணைமின் நிலைய சுவர் இடிந்து விபத்து: பலி 5ஆக உயர்வு

புதுச்சேரியில் துணமின் நிலைய சுவர் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் வசந்த் நகர் என்ற பகுதியில் பொலிவுறு நகரத்திட்டத்தின் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று(மார்ச். 31) காலை, வாய்காலில் இருந்த சேற்றை வெளியேற்றி சுவர் அமைக்கும் பணி நடந்தது. அப்போது சுற்று சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் இந்த பணியில் ஈடுபட்டிருந்த 16 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். மறுபக்கம் நின்றிருந்த 10 பேர் உயிர் தப்பியுள்ளனர்.

மின் துறைக்கு சொந்தமான 33 ஆண்டுகள் பழைய சுற்றுச்சுவர் சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில், அதிர்வு தாங்காமல் சுவர் இடிந்து விழுந்துள்ளதாகத் தெரிகிறது.

சம்பவம் நடைபெற்றவுடன் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து மீட்க மிக்க நடவடிக்கை எடுத்தனர். இருப்பினும் ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராத காரணத்தினால் மினி லாரியில் வைத்து தொழிலாளர்கள் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கட்டுமானப் பணியில் திருவண்ணாமலை, ஆத்தூர் பகுதி தொழிலாளர்கள் ஆகியோர் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

தற்போது இந்த விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் பலியானார்கள். இதையடுத்து இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாக்கியராஜ், பாலமுருகன், ஆரோக்கியராஜ், கமல், ராஜேஷ்கண்ணா ஆகிய 5 பேர் பலியாகியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர் சம்பத் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கரன் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com