
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு விவசாயிகளின் துயரம் தெரியாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி மயிலாடுதுறையில் வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
தமிழகத்தையே ஒழுங்காக காப்பாற்ற முடியாத மு.க. ஸ்டாலின் இந்தியாவையா காப்பாற்றப்போகிறார்.
ராகுல் பிரதமராவார் என்று மு.க. ஸ்டாலின் சொன்னார். ஆனால், அவரின் எம்.பி. பதவிக்கு ஆபத்து நேர்ந்தது. தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட போய்விட்டது.
டெல்டா பகுதிகளில் தொழிற்சாலைகளைக் கொண்டுவர மத்திய பாஜக முயற்சி செய்கிறது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து டெல்டா பகுதிகளை பாதுகாத்தது அதிமுக அரசுதான்.
விவசாயிகளின் பிரச்னைகளை மு.க. ஸ்டாலினால் புரிந்துகொள்ள முடியாது. நான் வந்த பாதை வேறு, ஸ்டாலின் வந்த பாதை வேறு, அவருக்கு விவசாயிகளின் துயரம் தெரியாது.எனது அடையாளம் விவசாயம். விவசயிகளின் துயரம் என்ன என்று எனக்குத் தெரியும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.