தங்க தமிழ்ச்செல்வன் என் சகோதரரைப் போன்றவர்: டிடிவி தினகரனின் மனைவி

தங்க தமிழ்ச்செல்வன் எனக்கு சகோதரரைப் போன்றவர் என டிடிவி தினகரன் மனைவி அனுராதா தெரிவித்துள்ளார்.
தங்க தமிழ்ச்செல்வன் என் சகோதரரைப் போன்றவர்: டிடிவி தினகரனின் மனைவி
Updated on
1 min read

தங்க தமிழ்ச்செல்வன் எனக்கு சகோதரரைப் போன்றவர் என டிடிவி தினகரன் மனைவி அனுராதா தெரிவித்துள்ளார்.

தேனி மக்களவைத் தொகுதியில் (பாஜக கூட்டணி) அமமுக சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் களமிறங்கியுள்ளார்.

இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்த நிலையில் தற்போது, இருவேறு கட்சிகளில் போட்டியிடுகின்றனர்.

தங்க தமிழ்ச்செல்வன் என் சகோதரரைப் போன்றவர்: டிடிவி தினகரனின் மனைவி
மு.க. ஸ்டாலின் பாதை வேறு; என் பாதை வேறு: இபிஎஸ் பிரசாரம்

தேனி தொகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரின் மனைவி அனுராதா முதல்முறையாக பிரசாரம் மேற்கொண்டர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

"எங்களுக்கு பழக்கப்பட்ட இடம்தான் தேனி. கடந்த சில நாள்களாக அவருடன் (டிடிவி தினகரன்) பிரசாரத்திற்கு சென்றிருந்தேன். பொதுமக்களிடையே டிடிவி தினகரனுக்கு வரவேற்பு உள்ளது. இது அமோக வெற்றியைப் பெற்றுத்தரும். தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது

ஜெயலலிதா ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வாக இருந்தபோதிருந்தே வந்து செல்வதால், தேனி பழக்கப்பட்ட இடமாக உள்ளது" என்றார்.

டிடிவி தினகரனுக்கு எதிராக தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தங்க தமிழ்ச்செல்வன் என் கணவரின் நண்பர். எனக்கு சகோதரரைப் போன்றவர். இதை மட்டுமே சொல்ல விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com