சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.
சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்துக்கு முதல்முறையாக வெயிலுக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை விடுத்துள்ளது.

ஏற்கெனவே வெப்ப அலை வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்கு தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், திருச்சி, கோவை, திருப்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

மேலும், தமிழக வட மாவட்டங்களில் சில பகுதிகளில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com