
தமிழ்நாடு காவல்துறையின் முக அடையாளம் கண்டறியும் இணையதள பக்கம் (FACIAL RECOGNITION SOFTWARE PORTAL) நேற்று (மே 3) ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.
வலேரி (Valerie) என்ற பெயருள்ள ஹேக்கரால் இணையதளப் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.
தமிழக காவல்துறையின் முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் மூலம் செயல்பட்டு வரும் அந்த இணையதளத்தில், குற்றவாளிகள், காணாமல் போனவர்கள் மற்றும் பல சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்தத் தரவுகள் அனைத்தும் பதிவேற்றப்பட்டுள்ளன.
மேலும், முதல் தகவல் அறிக்கைகள், அதில் சம்பந்தப்பட்டுள்ளவர்களின் விவரங்கள் மற்றும் 50,000-க்கும் மேற்பட்ட காவலர்களின் விவரங்களும் அதில் பதிவேற்றப்பட்டுள்ளன.
இந்தத் தரவுகள் அனைத்தும் ஹேக்கர்களுக்கு கிடைத்தால் அது அரசுக்கு பெரிய அச்சுறுத்தலாக அமையும்.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “இணையபக்கம் மொத்தமாக முடக்கப்படவில்லை. லாகின் (log in) தொடர்பான கோளாறு மட்டுமே. அதுவும் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.