
பிளஸ் 2 பொதுத் தேர்வில் விழுப்புரம் மாவட்டம் 93.17% சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றன. விழுப்புரம் மாவட்டத்தில் 121 அரசுப் பள்ளிகள் உள்பட 193 பள்ளிகளைச் சேர்ந்த 10,201 மாணவர்கள், 11,012 மாணவிகள் என மொத்தமாக 21, 213 பேர் தேர்வெழுதினர்.
இவர்களில் 9,224 மாணவர்களும், 10,540 மாணவிகளும் என மொத்தமாக 19,764 பேர் தேர்ச்சி பெற்றனர். 977 மாணவர்கள், 472 மாணவிகள் என மொத்தமாக 1449 பேர் தேர்ச்சி பெறவில்லை. மாவட்ட அளவில் 93.17% தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 90.42%, மாணவிகள் 95.71% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்தாண்டு விழுப்புரம் மாவட்டம் 90.66% தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் நிகழாண்டில் 2.51% கூடுதலாக தேர்ச்சி பெற்று 93.17% என்ற நிலையை எட்டியுள்ளது. மேலும் மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் 33 ஆவது இடத்திலிருந்து 27- ஆவது இடத்துக்கு முன்னேறியது.
அரசுப் பள்ளிகள் 91.30% தேர்ச்சி பெற்று மாநில அளவில் 20 -ஆவது இடத்தை பெற்றது விழுப்புரம் மாவட்டம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.