4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 4வது நாளாக ஒரே விலையில் நீடித்து வருகின்றது.
4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 4வது நாளாக ஒரே விலையில் நீடித்து வருகின்றது.

தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்றம் இறங்களைக் கண்டு வரும் நிலையில், வரலாற்றில் முதல் முறையாக மாா்ச் 28-ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 50,000-ஐ தொட்டது. ஏப்ரல் 19 ஆம் தேதி தங்கத்தின் வரலாறு காணாத அளவில் உயர்ந்து ரூ.55,120 என்ற புதிய உச்சத்தை தொட்டது.

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.52,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.6,610 ஆகவும் உள்ளது.

பணவீக்கம் மற்றும் சர்வதேச காரணிகளால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவே நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரக் காலமாக சிறிது இறக்கம் கண்டுள்ளதையடுத்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வரவேற்பு

ஆனால், வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.87.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1000 அதிகரித்து ரூ.87.500-க்கும் விற்பனையாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com