வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

கள்ளக்குறிச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

அரியலூர் மாவட்டத்துக்கு இன்று வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

கத்திரி வெயில் தொடங்கிவிட்ட நிலையில், தமிழகத்தில் வெப்ப அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவாகி வருகிறது. கரூர் மாவட்டம் பரமத்தியில் திங்கள்கிழமை 43.5 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது. இதில், நாட்டில் மூன்றாவது அதிகபட்ச வெயிலாகும்.

இன்றுடன் வெப்ப அலை குறையும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், அரியலூர் மாவட்டத்துக்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை தற்போது விடுக்கப்பட்டுள்ளது.

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

மேலும், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com