கலக்கத்தில் ஆழ்த்தும் நிலத்தடி நீர்மட்டம்: சென்னை தப்பிக்குமா?

கலக்கத்தில் ஆழ்த்தும் நிலத்தடி நீர்மட்டம்: ஏதாவது செய்தே ஆக வேண்டும்!
கலக்கத்தில் ஆழ்த்தும் நிலத்தடி நீர்மட்டம்: சென்னை தப்பிக்குமா?
-

சென்னை: தமிழகத்தில் 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் என்பது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் மிகவும் குறைந்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

அதேவேளையில், 11 மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்ட அளவானது சற்றே அதிகரித்துள்ளது.

இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், நிலத்தடி நீர்மட்ட தரவுகளை எக்ஸ்பிரஸ் குழுமம் எடுத்து ஆய்வு செய்ததில், சில மேற்கு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகச் சரிந்துள்ளது.

ஆச்சரியப்படும் வகையில் தருமபுரியில் சராசரி நிலத்தடி நீர்மட்டம் நல்ல முறையில் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு ஏப்ரலில் 8.98 மீட்டராக இருந்த நிலையில் இந்தாண்டு 5.78 மீட்டர்களாக அதிகரித்துள்ளது. அதுபோல நாமக்கல்லில் 9.34 மீட்டரில் இருந்த தண்ணீர் தற்போது 6.15 மீட்டராக அதிகரித்துள்ளது. ஆனால், சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட மேற்கத்திய மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் நீர்மட்டம் சரிவைக் கண்டுள்ளது.

கலக்கத்தில் ஆழ்த்தும் நிலத்தடி நீர்மட்டம்: சென்னை தப்பிக்குமா?
கொளுத்தும் வெயிலா? பொழியும் மழையா? தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை

அதில் முக்கிய இடத்தில் கோவை இடம்பெற்றுள்ளது. கடந்தாண்டு 9.4 மீட்டராக இருந்த நிலத்தடி நீர்மட்டம் தற்போது 10.85 மீட்டராக சரிந்துள்ளது. அதேவேளையில், சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக 0.5 மீட்டராகக் குறைந்திருப்பது தரவுகளின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.

பெரம்பலூர், திருச்சி, திருப்பூர் மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது. தெற்கு மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகரில் கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெய்த கனமழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

கடந்த பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் நல்ல மழை பெய்திருந்தபோதும், மேட்டூர் உள்ளிட்ட பல முக்கிய நீர்ஆதாரங்கள் வறண்டுவிட்டன. இதற்கு சீரான நீர்வள மேம்பாடு செய்யப்படாததே காரணம் என்று கூறப்பட்டது.

அதுபோலவே, ஆந்திரம், கர்நாடக மாநிலட்ஙகளில் நீர் மேலாண்மைக்கு ஒதுக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் குறைவாகவே தமிழகத்தில் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் சிலர் குறைகூறுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com