நெல்லை - சென்னை சிறப்பு ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே

நெல்லை மற்றும் சென்னை இடையிலான சிறப்பு ரயில்(06070) இன்று(மே 9) ஒருநாள் மட்டும் நெல்லையில் இருந்து தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோடை விடுமுறையையொட்டி சென்னை எழும்பூர் மற்றும் நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நெல்லை மற்றும் சென்னை இடையிலான சிறப்பு ரயில்(06070) இன்று(மே 9) ஒருநாள் மட்டும் நெல்லையில் இருந்து தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு :

நெல்லை மற்றும் சென்னை இடையிலான சிறப்பு ரயில்(06070) திருநெல்வேலியில் இருந்து 2.45 மணி நேரம் தாமதமாக புறப்படும். வழக்கமாக இரவு 6.45-க்கு புறப்பட வேண்டிய இந்த ரயில் 2.45 மணி நேரம் தாமதமாக இரவு 9.30 மணிக்கு புறப்படும்.

கோப்புப்படம்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்

ரயில் பெட்டிகளின் இணைப்பு பணி காரணமாக இந்த சிறப்பு ரயில் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com