சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: பலி 8 ஆனது
சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு


சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பயங்கர வெடி விபத்து நேரிட்டது. இதில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடிவிபத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
சுதர்சன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் 7 அறைகள் தரைமட்டமாகின. 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 10 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
முதலில், செங்கமலப்பட்டி விபத்தில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக்கொண்டிருந்ததால், அறைகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி சவாலாக இருந்தது. தீயணைப்பு வீரர்கள் போராடி விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...