நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு! பயணிகள் அதிர்ச்சி!

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு! பயணிகள் அதிர்ச்சி!

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு 2023 அக்டோபா் 14-ஆம் தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தாா். பயண கட்டணமாக ஜிஎஸ்டி வரியுடன் ரூ. 7,670 நிா்ணயம் செய்யப்பட்டது. கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு ஒரு சில நாள்களில வடகிழக்குப் பருவமழை காரணமாக கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

நாகை - காங்கேசன்துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை மே 13-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

பயணி ஒருவா் 60 கிலோ எடை கொண்ட பொருளை எடுத்து செல்லலாம். இதைத் தவிர கையில் 5 கிலோ பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவா். 60 கிலோ எடையை 20 கிலோ வீதம் 3 பண்டல்களாக பிரித்து எடுத்து வரவேண்டும்.

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு! பயணிகள் அதிர்ச்சி!
கார்கிலில் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க ஏற்பாடு: முதல் நாளில் 47 பேர் வாக்குப்பதிவு

கப்பலில் 150 இருக்கைகள் உள்ளன. இதில் 27 உயா் வகுப்பு இருக்கைள் ஆகும். சாதாரண இருக்கைக் கட்டணம் வரியுடன் ரூ. 4,956 ஆகவும், உயா் வகுப்பு இருக்கை கட்டணம் ரு. 7,500 ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பாஸ்போா்ட் அவசியம் என்றும், இந்திய நாட்டை சோ்ந்த பயணிகளுக்கு விசா தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நாளை தொடங்க இருந்த நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முன்பதிவு செய்த பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், முன்பதிவு செய்த பயணிகள் பயண தேதியை மாற்றலாம் அல்லது கட்டணத்தை திரும்ப பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைடுத்து, நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் மே 17 ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com