அரசுப் போக்குவரத்துக் காக பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிடக் கூடுதல் கட்டனம் வசூலிப்பதாக ’அண்ணா திராவிட முன்னேற்ற கழகத் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின்’ ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணத்தை எவ்வித முன்அறிவிப்புமின்றி திமுக அரசு உயர்த்தி உள்ளது. ஏழை-எளிய மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
அரசுப் பேருந்துகளில் படிக்கட்டுகள் தனியாக கழன்று விழுவது, மேற்கூரைகள் பெயருவது போன்ற விபத்துகள் பல நிகழ்வதாகவும் மக்களிடமிருந்து புகார்கள் எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, உயிரை பணயம் வைத்து ஏழை மக்கள் அரசுப் பேருந்துகளில் பயணிப்பதாகவும், இந்த நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நகரப் பேருந்துகளில் குறைந்த தூரத்துக்கு கூட ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விரைவுப் பேருந்து என்ற பெயரிலும் குறைந்த தூரத்திற்குள் பேருந்துகள் இயக்கப்பட்டு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல எனவும், இந்த விவகாரத்தில் அரசின் உத்தரவை அரசே மீறுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டின் முதல்வர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, அரசுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்துகளில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள்

நெல்லையில் அரசுப் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல்

விமானங்களில் 60% இருக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் கூடாது! மத்திய அரசு

சேலம் பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: பொதுமக்கள் கோரிக்கை
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை


