காட்டுப்பன்றிகளைத் தடுக்க அமைக்கப்பட்ட மின்வேலி இளைஞரின் உயிருக்கு எமனானது!

சோளிங்கர் அருகே விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு.
அனுமதியின்றி பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலி.
அனுமதியின்றி பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலி.கோப்புப்படம்
உயிரிழந்த கோகுல்
உயிரிழந்த கோகுல்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த ஜம்புகுளம் கிராமத்தில் வசித்து வந்தவர் 21 வயதான கோகுல். இவரது தந்தை பெயர் சின்னசாமி.

இந்நிலையில், இவர் நேற்று இரவு தனது பசு மாட்டிற்கு தீவனம் அளிப்பதற்காக தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். போகும் வழியில், எத்திராஜ் என்பவரின் நிலத்தை கடந்து அவர் சென்றுள்ளார்.

இந்த நிலையில்,அங்கே காட்டுப்பன்றிகளை தடுப்பதற்காக எத்திராஜ் மின்வேலி அமைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இதை கண்டறியாமல் அதை கடக்க முயன்ற போது, தவறுதலாக கோகுல் மின்வேலி மீது விழுந்துவிட்டர்.

உடனே, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற சோளிங்கர் போலீசார் கோகுலின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com