‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து! திருமாவளவன்

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து என திருமாவளவன் தெரிவித்தது பற்றி...

News image

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் - x

Updated On :1 ஏப்ரல் 2026, 12:53 pm IST

சென்னை திரு.வி.க. நகரில் போட்டியிடும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை திரு.வி.க. நகர் (தனி) தொகுதியில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் பொற்கொடி, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் திமுகவின் சார்பில் கே.எஸ். ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நாளிதழ் ஒன்றுக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது:

”பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் துணிச்சலுடன் பொது வாழ்வுக்கு வந்திருப்பதை நான் பாராட்டுகிறேன். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

அரசியலில் அவருக்கு ஒரு இடம் தேவை. அதிமுக அப்படியொரு இடத்தை அளித்திருப்பதை நான் வரவேற்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக கூட்டணி வேட்பாளரை திருமாவளவன் ஆதரித்து பேசியிருக்கும் நிலையில், திரு.வி.க. நகர் தொகுதி திமுக வேட்பாளர் கே.எஸ். ரவிச்சந்திரன் அதிருப்தி அடைந்துள்ளார்.

பகுஜன் சமாஜவாதி கட்சியின் மாநிலத் தலைவரும் பொற்கொடியின் கணவருமான ஆம்ஸ்ட்ராங், 2024 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து, பகுஜன் சமாஜவாதி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பொற்கொடி நியமிக்கப்பட்டார். இருப்பினும், கட்சியில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, கட்சியிலிருந்து பொற்கொடி நீக்கப்பட்ட நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் முதலாமாண்டு நினைவு தினமான ஜூலை 5-ல் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை பொற்கொடி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Summary

Porkodi Armstrong's Life in Danger! — Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.