அன்னூரில் ரூ.1.50 கோடி திருட்டு? குற்றவாளி கைதான பிறகு தெரியவந்த உண்மை!

அன்னூர் சொக்கம்பாளையத்தில் ரூ.1.50 கோடி திருடியதாக கூறிய வழக்கில் 24 மணி நேரத்தில் குற்றவாளியை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
அன்னூரில் ரூ.1.50 கோடி திருட்டு? குற்றவாளி கைதான பிறகு தெரியவந்த உண்மை!
Published on
Updated on
2 min read

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூர் சொக்கம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்.

பா.ஜ.க பிரமுகரான இவரது வீட்டில் நேற்றைய முன்தினம்(மே 18) வீட்டில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 1.5 கோடி பணம் மற்றும் 9 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்க பட்டதாக விஜயகுமார் அன்னூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. பத்ரிநாயணன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில் பத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தபட்டது

விசாரணையில் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது அங்கு சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவர் வந்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த நபர் குறித்து தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி கருமத்தம்பட்டி அருகே காளிபாளையம் பகுதியில் அந்த நபர் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவனை கைது செய்த காவல் துறையினர் அன்னூர் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அன்பரசன்(33) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த நபர் தான் விஜயகுமார் வீட்டினை நோட்டமிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னர் அன்பரசனிடம் இருந்து விஜயகுமார் வீட்டில் பூட்டை உடைத்து அவரை வீட்டில் இருந்த ரூ.18.50 லட்சம் மற்றும் ஒன்பது சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்தது உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும் விஜயகுமார் தனது வீட்டில் ரூ. 1.50 கோடி திருடபட்டதாக கூறியதால் அவரிடம் மீண்டும் விசாரனை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் விஜயகுமார் விரைவாக குற்றவாளிகளை பிடிக்க காவல்துறைக்கு அழுத்தம் தர வேண்டி பொய்யான தகவல்களை கூறியது தெரியவந்தது.

அன்னூரில் ரூ.1.50 கோடி திருட்டு? குற்றவாளி கைதான பிறகு தெரியவந்த உண்மை!
தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்: ஏக்நாத் ஷிண்டே

இதனையடுத்து குற்றவாளியிடம் இருந்து ரூ.18.50 லட்சம் ரொக்கம் மற்றும் ஒன்பது சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் அன்பரசன் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

அன்பரசன் மீது ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும் பொய்யான தகவல்களை கூறி காவல் துறையினரை அலைக்கழித்தாக பா.ஜ.க பிரமுகர் விஜியகுமார் மீது நீதிமன்ற உத்தரவுப்படி இரண்டு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ய உள்ளதாக கூறிய மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் அன்னூரில் பேட்டியளித்தார்.

மேலும், காவல்துறை அதிகாரிகளிடம் உண்மையை மட்டும் தெரிவித்தால்தான் விசாரணையை துரிதப்படுத்த முடியும். தவறான தகவல்களை கூறினால் அது விசாரணையை பாதிக்கும் இதுமாதிரி யாரும் இனி சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டார்

மேலும் திருட்டு சம்பவம் நடைபெற்று 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜி மற்றும் அவர்களுடன் இணைந்து செயல்பட்ட 10 தனிப்படை காவல் துறையினரை நேரில் அழைத்து மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com