
சில மாதங்களுக்கு முன்பு எண்ணூரில் உள்ள கோரமண்டல் உரத்தொழிற்சாலையில் திடீரென அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினா்.
இதையடுத்து ஆலையை தாற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி அருகே உள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தொடா்ந்து போராட்டம் நடத்தினர்.
இது தொடா்பான வழக்கு தென்மண்டல பசுமைத் தீா்ப்பாயத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும் உரத்தொழிற்சாலைக்கு பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தென்மண்டல பசுமைத் தீா்ப்பாயம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:
கோரமண்டல் தொழிற்சாலை மீண்டும் இயங்கும் முன் தமிழ்நாடு கடல்சார் வாரியம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் உள்ளிட்ட துறைகளிடம் தடைவில்லாச் சான்று பெற வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகள் கண்காணித்து அனுமதி வழங்க வேண்டும்.
கோரமண்டல் உரத்தொழிற்சாலைக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டும். அரசின் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை தொழிற்சாலை நிர்வாகம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.