சென்னை விமான நிலையத்தில் தூக்கி எறியப்படும் தங்கம்? மிரண்டுபோன அதிகாரிகள்

எவ்வாறு கடத்தல் கும்பல் சென்னை விமான நிலையத்தில் தங்கத்தை தூக்கி எறிந்து அதனை கடத்துகிறது என்ற உக்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம்.
விமான நிலையம்.

சென்னை: விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பொதுவாக சர்வதேச விமான நிலையங்களின் வருகை பகுதியில் தங்கம் உள்ளிட்ட விலை மதிப்புள்ள பொருள்களை பறிமுதல் செய்யும்போது அது மக்களுக்கு வெறும் செய்தியாக மட்டும் இருக்கலாம்.

ஆனால், சுங்க அதிகாரிகளுக்கு அதில் பல சவால்கள் நிறைந்திருப்பது யாருக்கும் தெரியாது. அப்படி ஒரு சம்பவம்தான் சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ளது. ​​சென்னை விமான நிலையத்தில், சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த வாரம் நடத்திய ஆய்வில், பயணிகள் புறப்படும் எக்ஸிகியூட்டிவ் லாஞ்ச் பகுதியின் சுவருக்கும் கண்ணாடிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை பயன்படுத்தி தங்க கடத்தலில் ஈடுபட்ட கும்பலை பிடித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமையன்று, மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புறப்படும் பயணிகள் தங்குமறையின் ஜன்னலிலிருந்து ஒரு பெட்டி வெளியே வீசப்பட்டதைக் கண்டார். இது பயணிகளின் உடைமைகளை பரிசோதிக்கும் இடத்துக்கு ஒரு தளத்துக்கு மேலே உள்ளது. அங்கிருக்கும் மற்றொரு பயணி அந்த பெட்டியை லாவகமாக கையில் பிடித்துக்கொள்கிறார். இதனைப் பார்த்த வீரர் உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை அனுப்புகிறார்.

விமான நிலையம்.
விதவிதமான மோசடிகள்: 18 லட்சம் சிம் கார்டுகள் முடக்கமா?

விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு நடத்திய விசாரணையில், ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பல், மிக லாவகமாக தங்கக் கடத்தலில் ஈடுபடுவது கண்டறியப்பட்டது. அதாவது, மூன்று பேர் பயணிகள் போலவும், ஒருவர் நிலைமையை கண்காணிக்கவும் வெளியே ஒருவர் தங்கத்தைப் பெற்றுக் கொள்ளவும் தயாராக இருப்பது என ஐந்து பேர் இணைந்து செயல்பட்டுள்ளனர்.

என்னதான் நடக்கிறது?

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பயணிகளின் தங்கும் அறையில் சுவருக்கும் கண்ணாடி ஜன்னலுக்கும் இடையிலான இடைவெளிதான் முக்கிய காரணி.

அதாவது, மூன்று பயணிகள் சென்னை - கொழும்புவுக்கு டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள். ஒருவர் மட்டும் முன்னதாக விமான நிலையம் சென்று உடைமைகளை பரிசோதனைக்கு உள்படுத்திவிட்டு, பயணிகள் தங்குமறைக்கு அருகில் இருக்கும் கழிப்பறைக்கு அருகில் இருப்பார்.

வெளிநாட்டிலிருந்து 35 லட்சம் மதிப்புள்ள தங்கத்தைக் கடத்தி வந்த பயணி (1) கழிப்பறைக்கு அருகில் இருக்கும் பயணியிடம் அந்த பெட்டியை கொடுப்பார். பிறகு பெட்டியை பெற்றுக் கொண்ட பயணி (2) எக்ஸிக்யூடிவ் தங்குமறைக்குச் செல்வார். அங்கிருக்கும் ஜன்னல் வழியாக அவர் வெளியே அதனை வீசுவார். முன்கூட்டியே உடைமைகளை சோதனை செய்த பயணி (3) அதனை லாவகமாக பிடித்துக் கொள்வார். இல்லையென்றால், திடீரென ஷுவை சரி செய்ய குனிந்தது போல குனிந்து கீழே விழுந்த அந்தப் பெட்டியை எடுத்துக் கொள்வார்.

விமான நிலையம்.
வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும்போது மறக்கக் கூடாத 5 விஷயங்கள்

அதற்கு முன்பே, அவர் அதிக உடைமைகளை வைத்திருப்பதாக அதிகாரிகளால் கூறப்பட்டிருப்பார். எனவே, தனது உடைமைகளைக் குறைக்க வெளியே செல்வது போல சென்று, அந்த தங்கக் கட்டியை வெளியே காத்திருக்கும் நான்காம் நபரிடம் கொடுத்துவிடுகிறார்.

ஐந்தாவது பயணி, உடைமைகளை சோதிக்கும் இடத்தில் நின்றுகொண்டு, நடக்கும் அனைத்தையும் யாராவது கவனிக்கிறார்களா? ஏதாவது சிக்கல் நேரிடுமா என்று கண்காணித்து ஏதாவது அபாயம் என்றால் சிக்னல் கொடுப்பார்.

இதில், விமான நிலையத்தில் மூன்று பயணிகளும் கைது செய்யப்பட்டனர். ஆனால், தங்கத்தைக் கடத்தி வந்தவர் யார் என்பதை கண்டறிய முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த கும்பல் விமான நிலையத்தின் பாதுகாப்புக் குறைபாடு தொடர்பான இரண்டு விஷயங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதாவது, பயணிகள் வருகைப் பகுதியில்தான் அதிக பாதுகாப்பு இருக்கிறது, வெளியேறும் பகுதியில் பாதுகாப்புக் குறைவாகவே இருக்கிறது, இதுதான் தங்களது திட்டத்துக்கு உதவியிருக்கிறது. அடுத்து, இந்தியாவிலிருந்து எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். அதற்கு கட்டுப்பாடு கிடையாது. ஒருவேளை பயணி 3ஆம் நபர் சிக்கினாலும் கூட, அவர் அதற்கான கட்டணத்தை செலுத்த ஒப்புக்கொண்டாலே போதும் என்பது தங்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com