விதவிதமான மோசடிகள்: 18 லட்சம் சிம் கார்டுகள் முடக்கமா?

விதவிதமான மோசடிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட 18 லட்சம் சிம் கார்டுகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விதவிதமான மோசடிகள்: 18 லட்சம் சிம் கார்டுகள் முடக்கமா?
Center-Center-Delhi

புது தில்லி: சைபர் கிரைம் மற்றும் ஆன்லைன் மோசடிகளைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் முதல் முறையாக மிகப்பெரிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 18 லட்சம் சிம் கார்டுகள் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு புகார்கள் எழுந்த 18 லட்சம் சிம் கார்டுகளை முடக்கியிருக்கிறது.

பண மோசடி, சைபர் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள் மற்றும் செல்ஃபோன் எண்கள் குறித்து மக்களிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பயன்பாட்டில் இருந்த 18 லட்சம் சிம் கார்டுகள் முடக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விதவிதமான மோசடிகள்: 18 லட்சம் சிம் கார்டுகள் முடக்கமா?
இன்று ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 49 தொகுதிகள் யார் பக்கம்?

ஒரே ஒரு கைப்பேசியிலிருந்து பல ஆயிரக்கணக்கான சிம்கார்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது, ஒரு மாநிலத்தில் வாங்கிய சிம்கார்டுகள், அண்டை மாநிலங்களில் மோசடிக்குப் பயன்படுத்தப்படுவது என விதவிதமான மோசடிகளை செய்ய மோசடியாளர்கள் சிம் கார்டுகளை பயன்படுத்தியிருப்பது பல்வேறு விசாரணை அமைப்புகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்.

அதாவது, தொலைத் தொடர்புத் துறை, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மே 9ஆம் தேதி 28,220 செல்ஃபோன்களை முடக்கவும், 20 லட்சம் செல்போன் எண்களை பயன்படுத்துவோரின் தகவல்களை மறு ஆய்வு செய்யவும் அறிவுறுத்தியிருக்கிறது. அதில், 10 சதவீத செல்ஃபோன் எண்கள் மட்டுமே ஆய்வுக்குள்படுத்தப்பட்டுள்ளன. மற்ற அனைத்து எண்களும் ஆய்வுக்குள்படுத்த பயனர்கள் முன்வராததால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விதவிதமான மோசடிகள்: 18 லட்சம் சிம் கார்டுகள் முடக்கமா?
அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரிப்பது ஏன்?

கடந்த 2023ஆம் ஆண்டில் சைபர் மோசடி மூலமாக மக்கள் இழந்த ஒட்டுமொத்தக தொகை ரூ.10,319 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 6,94,000 புகார்கள் வந்துள்ளன.

இந்த மோசடியாளர்கள், பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சிம் கார்டுகளை பெற்று மோசடிகளை செய்துவிட்டு, சிம் மற்றும் செல்ஃபோன்களையும் மாற்றிவிட்டு அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுகிறார்கள்.

விதவிதமான மோசடிகள்: 18 லட்சம் சிம் கார்டுகள் முடக்கமா?
கிா்கிஸ்தானில் இந்திய, பாகிஸ்தான் மாணவா்கள் குறிவைக்கப்படுவது ஏன்?

அதோடு, ஒடிசா மற்றும் அசாமில் வாங்கும் சிம் கார்டுகளை தில்லியில் பயன்படுத்துகிறார்கள். ஒரே எண்ணிலிருந்து அதிகமான அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டால், தொலைத் தொடர்பு நிறுவனத்தின் கண்காணிப்புக்குள் சிக்கிவிடுவோம் என்பதால், ஒரு சிம் கார்டை பயன்படுத்தி சில அழைப்புகளை மேற்கொண்டுவிட்ட, உடனடியாக வேறு சிம் கார்டுகள் மாற்றப்பட்டு விடுகிறது.

எனவே, ஒரு மாநிலத்தில் வாங்கிவிட்டு, ஒரு சிம் கார்டை வேறு மாநிலத்தில் பயன்படுத்தப்பட்டால், அதுவும் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல ஒரு எண்ணிலிருந்து தொடர்ந்து நிறைய எண்களுக்கு அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டாலும் அந்த எண்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com