மே 20 - ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 49 தொகுதிகள் யார் பக்கம்?

மே 20 - ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 49 தொகுதிகளைப் பற்றி...
மே 20 - ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 49 தொகுதிகள் யார் பக்கம்?
Nand Kumar

மத்தியில் புதிய அரசைத் தேர்ந்தெடுப்பதற்கான மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு, இன்று மே 20 திங்கள்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றிருக்கிறது.

ஏற்கெனவே தென் மாநிலங்கள் அனைத்திலும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் முடிந்துவிட்ட நிலையில், இன்று வாக்குப் பதிவு நடைபெற்ற 13 தொகுதிகளுடன் மகாராஷ்டிரத்திலும் தேர்தல் முடிவுக்கு வந்தது.

இன்றைய ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 49 தொகுதிகளில் அதிக அளவிலான – 80% தொகுதிகள், அதாவது 39 தொகுதிகள், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வசம் இருப்பவைதான். அதிகளவாக, உத்தரப் பிரதேசத்தில் 14-ல் 13 தொகுதிகளும் மகாராஷ்டிரத்தில் 13-ல் 11 தொகுதிகளும் தற்போது இந்தக் கூட்டணியிடம்தான் இருக்கின்றன.

இவையன்றி வாக்குப் பதிவு நடைபெற்ற மாநிலங்களில் பிகாரிலுள்ள 5 தொகுதிகளும் ஜார்க்கண்டிலுள்ள 3 தொகுதிகளும் ஒடிசாவில் 5-ல் 3 தொகுதிகளும் மேற்கு வங்கத்தில் 7-ல் 3 தொகுதிகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் இருக்கின்றன.

மே 20 - ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 49 தொகுதிகள் யார் பக்கம்?
வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்திக்கும் பிரியங்கா காந்திக்கும் அகிலேஷ் யாதவுக்கும் முன்னெப்போதுமில்லாத அளவில் கூட்டம் திரள்வதாக சமூக வலைத்தளங்கள் குறிப்பிடுகின்றன. அதேவேளையில் பாரதிய ஜனதாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் கூட்டம் திரளத்தான் செய்கிறது. மக்கள் என்ன நினைக்கிறார்கள், தொகுதிகளில் கள நிலவரம் யாருக்கும் சாதகமாக இருக்கிறது என்பதை உறுதியாகக் கண்டறிய முடியவில்லை.

மகாராஷ்டிரத்தில் கடந்த தேர்தலைப் போல அல்லாமல் முற்றிலுமாக அரசியல் சூழ்நிலை மாறியிருக்கிறது. காங்கிரஸுடன் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனை ஆகியவையும் இவ்விரண்டு கட்சிகளிலிருந்து விலகிவந்த ஷிண்டே, அஜித் பவார் அணிகளுடன் பாரதிய ஜனதாவும் இணைந்து போட்டியிடுகின்றன.

இந்தியா கூட்டணி பெரும் வெற்றியைப் பெறும் என்று சில நாள்கள் முன் மும்பையில் நடந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளனர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும். ஜூன் 4-ல் நல்ல காலம் பிறக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400-க்கும் அதிகமான தொகுதிகள் கிடைக்கும்; உத்தவ் தாக்கரே அணியே இருக்காது என்று குறிப்பிட்டிருக்கிறார் பா.ஜ.க. அணியிலுள்ள சிவசேனையின் தலைவரும் மாநில முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே.

மே 20 - ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 49 தொகுதிகள் யார் பக்கம்?
ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

மேற்கு வங்கத்திலும் ஒடிசாவிலும் கடந்த தேர்தலில் இழந்துவிட்ட தொகுதிகளையும் சேர்த்து இந்த முறை கைப்பற்ற முடியும் என்று எதிர்பார்க்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி.

ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவிலும் மிகக் குறைவான தொகுதிகளே இந்தியா கூட்டணியின் வசமிருப்பவை – வெறும் 7. இவற்றில் மேற்கு வங்கத்தின் 7 தொகுதிகளில் 4, மகாராஷ்டிரத்தின் 13 தொகுதிகளில் 2 (இரண்டுமே உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனை வசமுள்ளவை), இன்னுமுள்ள ஒரு தொகுதி உத்தரப் பிரதேசத்தின் ரே பரேலி (ஏற்கெனவே சோனியா காந்தி வெற்றி பெற்றிருந்த இந்தத் தொகுதியில்தான் தற்போது ராகுல் காந்தி போட்டியிடுகிறார்).

ஐந்தாம் கட்டத் தேர்தலில் மகாராஷ்டிரத்தில் அதிகளவிலான தொகுதிகளைக் கைப்பற்ற முடியும் என்றும், இடமேயில்லாத பிகாரிலும் இடங்களைப் பெற முடியும் என்றும் இந்தியா கூட்டணி நம்புகிறது.

ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் மீதியுள்ள இரண்டு ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி வசமுள்ளவை. மற்றொரு தொகுதி ஜம்மு - காஷ்மீரில் இருக்கிற எல்லைகள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட தொகுதி.

இன்று களம் காண்பவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்:

ரே பரேலியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. நாடு விடுதலை பெற்றதிலிருந்து ஒரே ஒரு முறை தவிர, தொடர்ந்து காங்கிரஸ் வெற்றி பெற்றுவரும் தொகுதி இது. ஏற்கெனவே கேரளத்தில் வயநாட்டில் போட்டியிட்டபோதிலும் வட இந்தியாவிலும் போட்டியிட வேண்டும் என்பதற்காக இங்கேயும் ராகுல் காந்தி போட்டியிடுவதாகக் கருதப்படுகிறது. இந்த முறை வாக்கு வித்தியாசத்தை அதிகரிக்க வேண்டும் என்று நினைக்கிறது காங்கிரஸ்.

லக்னௌவில் போட்டியிடும் ராஜ்நாத் சிங். தொடர்ந்து பல முறை முன்னாள் பிரதமர் வாஜபேயி வெற்றி பெற்ற இதே தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறுவதற்கான முனைப்பில் இருக்கிறார்.

அமேதியில் போட்டியிடும் ஸ்மிருதி இரானி. கடந்த முறை இந்தத் தொகுதியில் ராகுல் காந்தியைத் தோற்கடித்தார். இந்த முறை அமேதியைத் தவிர்த்து ரே பரேலியில் போட்டியென ராகுல் காந்தி அறிவித்ததும் அதற்காகக் கேலி செய்தனர். ஆனால், காந்திகளின் குடும்பத்துக்கு நெருக்கமான கே.எல். சர்மாவை இங்கே நிறுத்தியுள்ள காங்கிரஸ், சப்தமில்லாமல் இரானியைத் தோற்கடிக்க வேண்டும் எனத் திட்டமிடுகிறது.

மே 20 - ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 49 தொகுதிகள் யார் பக்கம்?
விதவிதமான மோசடிகள்: 18 லட்சம் சிம் கார்டுகள் முடக்கமா?

இன்றைய ஐந்தாவது கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 49 தொகுதிகளுடன் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 429 தொகுதிகளில் தேர்தல் முடிந்துவிட்டது. இன்னும் மே 25, ஜூன் 1 ஆகிய இரு நாள்களில் 58, 57 என மொத்தம் 115 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப் பதிவுகள் நடைபெற வேண்டியுள்ளது.

மிக அதிக அளவாக உத்தரப் பிரதேசத்தில் 27 தொகுதிகளுக்கும் மேற்கு வங்கத்தில் 17 தொகுதிகளுக்கும் பிகாரில் 16 தொகுதிகளுக்கும் பஞ்சாபில் 13 தொகுதிகளுக்கும் ஒடிசாவில் 12 தொகுதிகளுக்கும் ஹரியாணாவில் 10 தொகுதிகளுக்கும் ஜார்க்கண்ட், தில்லியில் தலா 7 தொகுதிகளுக்கும் ஹிமாச்சலில் 4 தொகுதிகளுக்கும் சண்டீகர், ஜம்மு - காஷ்மீரில் தலா ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெற வேண்டும்.

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிரத்தில் இன்றுடன் தேர்தல் முடிந்துவிட்டது. அடுத்தது என்ன, பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com