
கடையநல்லூர்: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீசி உடைத்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தென்காசியில் இருந்து மதுரைக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. வாசுதேவநல்லூர் அருகே உள்ள திருமலாபுரம் விலக்கில் பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் முகத்தில் துணியைக் கட்டி மறைத்தவாறு வந்த சிலர் அரசுப் பேருந்தின் மீது கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பேருந்தின் கண்ணாடிகள் சேதம் அடைந்தன.
இதையடுத்து, அரசுப் பேருந்தின் ஓட்டுநர் மாரிமுத்து( 49), நடத்துநர் பெரியசாமி(49) ஆகியோர் அளித்த தகவலின் பேரில் புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன், வாசுதேவநல்லூர் காவல் ஆய்வாளர் கண்மணி, சிவகிரி காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி உள்ளிட்ட ஏராளமான போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, பேருந்துகளை போலீஸார் அப்பகுதியில் இருந்து பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.