வங்கக் கடலில் உருவாகும் தீவிர புயலின் பெயர் இதுதான்!

வங்கக் கடலில் உருவாகவுள்ள தீவிர புயலின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது..
வங்கக் கடலில் உருவாகும் தீவிர புயலின் பெயர் இதுதான்!

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், உருவாகவுள்ள புதிய புயலின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

வடதமிழக - தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று காலை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று(மே 23) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

வங்கக் கடலில் உருவாகும் தீவிர புயலின் பெயர் இதுதான்!
அக்னிவீர் பற்றிப் பேசக் கூடாதா? தேர்தல் ஆணையத்துக்கு சிதம்பரம் கண்டனம்!

வலுவடைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை மாறுகிறது. பின்னர் வடகிழக்குப் பகுதியில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும்.

தீவிரமாக வலுப்பெறும் புயலானது மே 26-ம் தேதி மாலை வங்கதேசத்திற்கு அருகே கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகும் தீவிர புயலின் பெயர் இதுதான்!
டெம்போவில் ராகுல் காந்தி!

இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெறும் பட்சத்தில் வங்கக்கடலில் உருவாகவுள்ள தீவிர புயலுக்கு "ரெமல்" எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக உருவான புயல்களுக்கு ஈரான் பரிந்துரைத்த ஹமூன், இந்தியா பரிந்துரைத்த தேஜஸ், கடந்த 2023ல் மாலத்தீவு நாடு பரிந்துரைத்த மிதிலி என்ற பெயர்கள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று (மே 23) தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,

ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றம் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com