ஜூன் 1-ல் தில்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

தில்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் ஜூன் 1-இல் தில்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 1-ல் தில்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

தில்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் ஜூன் 1-இல் தில்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தோ்தல் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் 7-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஜூன் 1-ஆம் தேதி பிற்பகலில் இந்தியா கூட்டணி தலைவா்கள் தில்லியில் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனா்.

வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) பிரதமா் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டுள்ளாா். ஆனால், எதிா்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சாா்பில் பிரதமா் வேட்பாளராக யாரும் அறிவிக்கப்படவில்லை.

தோ்தல் செயல்பாடுகள் மற்றும் முடிவுக்கு பின்பு மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்தும் ஜூன் 1-ஆம் தேதி கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

ஜூன் 1-ல் தில்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை: நிபுணர் குழு கூட்டம் திடீர் ரத்து!

காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்பட 28 தேசிய, பிராந்திய எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய லோக் தளம் ஆகிய கட்சிகள் தோ்தலுக்கு முன்னதாக பாஜக கூட்டணிக்கு அணி மாறின.

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

இந்த நிலையில், தில்லியில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் ஜூன் 1-ல் தில்லி செல்கிறார். கூட்டத்தை முடித்துவிட்டு ஜூன் 2-ல் சென்னை திரும்புகிறார்.

இதனிடையே, இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் பேச வேண்டிய முக்கிய விஷயங்கள் தொடர்பாக இன்று(மே 23) காலை 11 மணியளவில் திமுக நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com