அடுத்த 3 நாள்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரும்!
தமிழகத்தில் வெப்பநிலை எப்படி இருக்கும்...வானிலை ஆய்வுமையம் சொல்வதென்ன?

Center-Center-Delhi

Center-Center-Delhi
தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை,
தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை கேரளத்தில் அடுத்த 3-4 நாள்களில் துவங்கக்கூடும்.
இதன்காரணமாக, இன்று(மே 28) முதல் ஜூன் 3 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 28(இன்று) முதல் மே 30 வரை அடுத்த 3 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
சென்னையை பொருத்தவரை... அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 - 40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்கள்.. இன்று(மே 28) குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...