
சென்னை மாநகர பேருந்துகளில் 2ம் கட்டமாக 248 கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் தனது எக்ஸ் தளப் பதிவில், பயணிகளின் பாதுகாப்பிற்காக சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக சென்னை மாநகர பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
மொத்தம் 468 பேருந்துகள் கதவுகள் இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. முதற்கட்டமாக, 200 பேருந்துகள் தேர்வு செய்யப்பட்டு, அனைத்திலும் கதவுகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டன.
இரண்டாம் கட்டமாக, 268 பேருந்துகள் தேர்வு செய்யப்பட்டு, இன்று 248 கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.
பயணிகள் அனைவருக்கும் பாதுகாப்பான பயண அனுபவத்தை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.