'இந்தியா' கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் தில்லி பயணம் ரத்து?

தில்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தில்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தோ்தல் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. 7-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஜூன் 1-ஆம் தேதி பிற்பகலில் இந்தியா கூட்டணி தலைவா்கள் தில்லியில் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனா்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஜூன் 1-ல் தில்லி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இக்கூட்டத்தில் தோ்தல் செயல்பாடுகள் மற்றும் முடிவுக்கு பின்பு மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

கோப்புப்படம்
பிரதமர் மோடியின் 28 வினாடி தியான விடியோ!

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று முன்னதாக அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினும் இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலாக திமுக எம்.பி. டிஆர் பாலு பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com