கோப்புப் படம்
கோப்புப் படம்

ராமநாதபுரம் - தாம்பரம் இடையே நாளை சிறப்பு ரயில்

ராமநாதபுரத்தில் இருந்து தாம்பரத்துக்கு நவ.3 -ஆம் தேதி இருக்கை வசதிக் கொண்ட ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
Published on

ராமநாதபுரத்தில் இருந்து தாம்பரத்துக்கு நவ.3 -ஆம் தேதி இருக்கை வசதிக் கொண்ட ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரத்தில் இருந்து நவ.3-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ஒருவழி அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்: 06162) இரவு 11.40 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில் ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம் , விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்லப்பட்டு வழியாக தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதிக்கொண்ட 2 பெட்டிகள், பொது இரண்டாம் வகுப்பு 11 பெட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் வகுப்பு பெட்டி ஒன்று இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com