
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் விஜய் நாளை ஆலாசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த வாரம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகிவுள்ளது. இந்த சூழலில், தவெக நிர்வாகிகளின் அவசர கூட்டம் பனையூரில் நாளை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டத்தில் முக்கியமான ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு விஜய் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாநாட்டுக்குப் பிறகு அரசியல் கட்சிகள் முன் வைத்து வரும் விமர்சனங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடம் கட்சியின் பொதுச்செயலர் என்.ஆனந்த் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.