இ-பாஸ் சோதனை தீவிரம்: கல்லார் சோதனைச் சாவடியில் காத்திருக்கும் வாகனங்கள்!

இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டதால் கல்லார் சோதனைச் சாவடியில் காத்திருக்கும் வாகனங்கள்!
கல்லார் சோதனைச் சாவடி
கல்லார் சோதனைச் சாவடி
Published on
Updated on
1 min read

நீலகிரி நுழைவாயிலான கல்லார் சோதனைச் சாவடியில் இ -பாஸ் சோதனை தீவிரமடைந்திருப்பதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.

நீலகிரி மாவட்டத்துக்குள் செல்ல இ-பாஸ் வைத்திருக்கிறார்களா என்ற சோதனைக்குப் பின்னரே மாவட்டத்திற்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால் நீண்ட தூரம் வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன வாகனங்கள் .

நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் இருந்து தற்போது வரை இந்த இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வரும் நிலையில் நேற்றைய தினம் இ-பாஸ் நடைமுறையை நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகங்கள் சரியான முறையில் பின்பற்றாததால் தொடர்ந்து மலைப்பகுதியில் வாகன எண்ணிக்கைகள் அதிகமாக இருப்பதாக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இதையடுத்து ஏற்கனவே இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வரும் நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நீலகிரி மாவட்ட நுழைவாயிலான மேட்டுப்பாளையம் வழியாக நாள்தோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.

இதையடுத்து சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள கல்லார் சோதனை சாவடியில் இ-பாஸ் பதிவு செய்துள்ளதா என தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சோதனை சாவடிகளில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com