
சென்னை, செங்கல்பட்டு உள்பட 14 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) திங்கள்கிழமை உருவானது. இது, மேற்கு நோக்கி நகா்ந்து தமிழக கரையை நெருங்குவதாக இந்திய வானிலை மையம் செவ்வாய்க்கிழமை காலை தெரிவித்துள்ளது.
இதனிடையே, சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் நேற்றிரவு முதல் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகின்றது. அதேபோல், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாலை 4 வரை..
இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மாலை 4 மணிவரை காற்றுடன் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், மதுரை, குமரி மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.