
சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) திங்கள்கிழமை உருவானது. இது அடுத்த இரு நாள்களில் மேற்கு நோக்கி நகர்ந்து தமிழக கடற்கரையை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதையும் படிக்க: சென்னையில் நாளை காலைக்குள் 200 மி.மீ. மழை பெய்ய வாய்ப்பு!
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று(நவ. 15) மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.12) முதல் நவ.14 வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.