

கனமழை எச்சரிக்கை: சென்னை உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாள்களாக உதகையைப் போன்று சிலுசிலுவென குளிர்ந்த காற்றும், காலை உறைபனியும் மனதிற்கு இதமான காலநிலை நிலவி வருகின்றது. இந்த நிலையில், இன்று சென்னையின் பிற பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டமாக இருந்து வருகின்றது.
சென்னையில் மழை
இன்று காலை முதல் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் லேசான தூரல் பெய்து வந்த நிலையில், ஒருசில இடங்களில் அதாவது சென்னை சென்ட்ரல், பெரியமேடு, புரசைவாக்கம், தியாகராஜ நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.
எங்கெல்லாம் இன்று கனமழை?
கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை எங்கெல்லாம் கனமழை?
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் நாளை (ஜன. 24)ல் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் வெப்பநிலை
இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.