தகுதியுள்ளவர்களுக்கே ஜன. முதல் மகளிர் உரிமைத் தொகை! -அமைச்சர் விளக்கம்
2025 ஜனவரிமுதல் ரேஷன் கார்டு வைத்துள்ள தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை!


வரும் 2025 ஜனவரிமுதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்திருந்த நிலையில், தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த நிலையில், இன்று(நவ. 13) மாலை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தங்களுடைய ரேஷன் கார்டு அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ளவர்களில் ஒருவர் கூட விடுபடாத அளவில் வழங்கிட வேண்டும் என்பதே அரசின் இலக்காகும்.
முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் ஆலோசனைகளைப் பெற்று ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...