ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :15 நவம்பர் 2024, 7:35 pm

Din

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் ஆா்.அரவிந்த் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தாா். அதில், அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை சென்னை முதன்மை நீதிமன்றம் விசாரிப்பதற்கு அதிகாரமில்லை. எனவே, அந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா்.

மேலும், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. அதற்கு காரணமான அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன என நீதிபதிகள் கேள்வியெழுப்பினா்.

அதற்கு பதிலளித்த மனுதாரா், செந்தில் பாலாஜிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக தனிப்பட்ட முறையில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினாா்.

பின்னா், அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான சிறப்பு வழக்குரைஞா் என்.ரமேஷ், விசாரணை நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வழக்குக்கு தொடா்பில்லாத மூன்றாம் நபா் இது போன்ற மனுக்களை தாக்கல் செய்ய முகாந்திரம் இல்லை எனக் கூறினாா். இந்த மனுவை திரும்பப் பெறவில்லை என்றால் அதிக அபராதம் விதிக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனா். இதையடுத்து, மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாகக் கூறப்பட்டதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.